scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

March 16, 2015

சிறப்பு ஆசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு

இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான முதல் கட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் போட்டித் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும். போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்படுவர். மொத்தம் 95 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் 190 "அப்ஜெக்டிவ் டைப்' வினாக்கள் இடம்பெற்றிருக்கும் என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு இந்தத் தேர்வுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும். பெரும்பாலும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் போட்டித் தேர்வு நடைபெறும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். கடந்த 2012-ஆம் ஆண்டில், 1,028 சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஒருவர் தொடர்ந்த வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். போட்டித் தேர்வு, நேர்காணல் மூலம் சிறப்பு ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பு ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்குப் பதிலாக, பதிவு செய்தவர்களிலிருந்து போட்டித் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. பாடத்திட்டம்: இந்தத் தேர்வுக்காக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 5-ஆம் தேதி வெளியிட்டது. இதில், ஓவிய ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் குழப்பமளிக்கும் வகையில் உள்ளதாக புகார் எழுந்தது. ஓவிய ஆசிரியருக்கான தொழில்நுட்பத் தேர்வு அடிப்படையில் பாடத்திட்டம் இல்லை என்றும், 5 ஆண்டு நுண்கலை (பி.எஃப்.டி.) படிப்பு பாடத்திட்டத்துக்கு இணையாக அது அமைந்துள்ளதாகவும் சிறப்பு ஆசிரியர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வு; அடுத்த வாரம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் .

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வு; அடுத்த வாரம் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

CABINET MAY APPROVE 6 PERCENT DA HIKE IN NEXT WEEKThe Union Cabinet is likely to approve hiking dearness allowance (DA) to 113 per cent from existing 107 per cent benefiting 30 lakh central government employees and 50 lakh pensioners in its meeting scheduled in next week. Finance Minister Arun Jaitley “The Union Cabinet will take a proposal to hike Dearness allowance for its employees and dearness relief for its pensioners to 113 per cent in next week as per agenda listed for the meeting,” a source said. The hike in DA would be effective from the January 1 this year.

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி: பாடங்கள் நடத்துவதில் சிக்கல்.

தொடர்ந்து நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களின் திறனை வளர்ப்பது, எளிய முறையில் கல்வி கற்பிப்பது, புதிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, மொழிப் பாடங்களை கையாள்வது உட்பட பல்வேறு வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான நிதி, மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளே, சிக்கலையும் ஏற்படுத்துகிறது. தொடர்ந்து நடத்தப்படும் பயிற்சிகளால், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் சிரமம் ஏற்படுவதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 890 துவக்கப்பள்ளிகள், 293 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ள துவக்கப்பள்ளிகள், பல உள்ளன. அவர்களில், ஒரு ஆசிரியர் பயிற்சிக்கு கட்டாயமாக செல்ல வேண்டியுள்ளது; இதனால், மற்றொரு ஆசிரியர் மட்டுமே, அனைத்து குழந்தைகளுக்கும் பாடம் நடத்தி, பாதுகாக்க வேண்டியுள்ளது. நடுநிலைப்பள்ளிகளிலும் இதே நிலை நீடிக்கிறது. பயிற்சிக்கு கட்டாயம் 3 ஆசிரியர்கள் செல்ல வேண்டிய இருப்பதால், எஞ்சிய ஆசிரியர்கள், அனைத்து வகுப்புகளையும் கவனிக்க முடியாமல் திணறுகின்றனர். நீண்ட நாட்களுக்கு பயிற்சி தொடர்வதால், முதற்கட்ட பயிற்சியில் ஈடுபாடு காட்டும் ஆசிரியர்கள், நாளடைவில் ஆர்வம் காட்டு வதில்லை. தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "பயிற்சி பெறுவதால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மையே பயக்கும். இருப்பினும், பயிற்சி பல நாட்களுக்கு தொடர்வதால், பாட வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இறுதி கட்டத்தில், அவசர அவசரமாக அவற்றை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. "பாடங்களை தவிர, இதர பதிவேடுகளையும், ஆசிரியர்களே பராமரிப்பது போன்ற பணிகளால், வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பயிற்சிகளை கல்வித்துறை திட்டமிட வேண்டும்,' என்றார்.

March 13, 2015

எஸ்.எஸ்.ஏ பயிற்சி நாட்களை வேலை நாட்களாக கணக்கிட ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஏ குறுவள மைய பயிற்சி நாட்களைபள்ளி வேலை நாட்களாக கணக்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (எஸ்எஸ்ஏ) மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் குறுவள மைய அளவில் ஆண்டிற்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இப்பயிற்சி நாட்கள் பணி நாட்களாக கணக்கில் கொள்ளப்பட்டது. கடந்த கல்வி ஆண்டுகளில் பள்ளி வேலை நாட்களை அந்தந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களே தயாரித்து வந்தனர். இதில் ஆண்டிற்கு 210 பள்ளி வேலை நாட்களுடன் 10 குறுவளமைய பயிற்சி நாட்களையும் சேர்த்து 220 நாட்கள் பணி நாட்களாக கணக்கிடப்பட்டது.ஆனால் தற்பொழுது மாநிலம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறை இயக்ககங்கள் மூலம் பள்ளி வேலை நாட்கள் அறிவிக்கப்படுகின்றன. இதில் பல்வேறு மாவட்டங்களில் குறுவளமைய பயிற்சி நாட்களை பணி நாட்களாகவோ அல்லது ஈடு செய்யும் தற்செயல் விடுப்பு நாட்களாகவோஅறிவித்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் சில ஒன்றியங்களில் ஈடு செய்யும் சிறப்பு தற்செயல் விடுப்பு, உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின்வாய்மொழி உத்தரவுப்படி எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர். பல ஒன்றியங்களில் இவ்விடுப்பு மறுக்கப்படுகிறது. தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் தற்செயல் விடுப்பு வழங்கி மற்ற ஆசிரியர்களுக்கு அனுமதி மறுப்பதும் நடந்து வருகிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், இந்த கல்வியாண்டில் பணி நாட்களை கணக்கிடுவதில் குழப்பம் நீடித்து வருகிறது. உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் இது குறித்து தெளிவான முடிவை அறிவிக்காமல் உள்ளனர். இதனால் ஆசிரியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே உடனடியாக ஈடு செய்யும் தற்செயல் விடுப்போ அல்லது பணி நாளாகவோ பயிற்சிநாட்களை அறிவிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்ச் 14ல் நடக்க இருக்கும் குறுவள மைய பயிற்சியில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார். 

தொடக்க கல்வித்துறை அதிரடி உபரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவு

தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆசிரியர் &மாணவர் விகிதாச்சாரப்படி, அதிகமாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக தொடக்க கல்வி இயக்குநர் பொதுத்தொகுப்புக்கு சரண் செய்ய வேண்டும். இதற்கான படிவங்களில் பணியிடத்தின் பெயர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியரா, எந்த பாடம் எடுக்கிறார், எந்த பள்ளியில் பணியாற்றுகிறார், பணி அனுமதி வழங்கப்பட்ட அரசாணை எண் மற்றும் நாள் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சரண் செய்யப்பட்ட பணியிடங்களை எக்காரணம் கொண்டும் காலிப் பணியிடங்களில் காட்டக் கூடாது. மேற்கண்ட பணியிடங்கள் ஒப்படைப்பு செய்யப்பட்ட விவரங்களை தொடக்க கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, ஏதாவது குறைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், அவர் சார்ந்த அலுவலர்களே பொறுப்பாவார்கள்.

1,000 அரசு தொடக்க பள்ளிகள் மூடும் அபாயம்

தொடக்கப் பள்ளிகளில், மாணவர் பற்றாக்குறையால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நீக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும், 25,200 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் தற்போது, 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில், ஆசிரியர்கள் உள்ளனர். தலா 2 ஆசிரியர்கள்:இவற்றில், 10 ஆயிரம் பள்ளிகளில், தலா, இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரண்டு ஆசிரியர்கள் தான், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 21 பாடங்களை நடத்த வேண்டும். மேலும், தேர்தல் பணிகள், சமூகநலத் துறைத் திட்டம், கல்வித் துறை திட்டப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். இதில் ஒரு ஆசிரியர் விடுமுறை எடுத்தால், ஒரு ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருப்பார். அவரும் அரசுப் பணிக்கு சென்று விட்டால், பள்ளியில் ஆசிரியர் அல்லாத நிலை தான் ஏற்படுகிறது.தனியார் பள்ளிகளுக்கு, அதிக அளவில் அரசே அனுமதி அளிப்பதால், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது.ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, கல்வித் துறை முயற்சி மேற்கொள்ளவில்லை. மாறாக, மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளின், 1,000 ஆசிரியர் பணியிடங்களை, அரசிடமே திரும்ப ஒப்படைக்க, தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆசிரியர் பணியிடங்களை குறைத்தால், தொடக்கப் பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும் என்று கவலை அடைந்து உள்ளனர். அதிகாரிகளிடம் முறையீடு:மாணவர் விகிதத்தை வைத்து, ஆசிரியர் பணியிடங்களை குறைப்பது, பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுவதற்கு வழி ஏற்படும்.

6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்

தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 21 வரை நடைபெற உள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அமலில் உள்ளதால், இந்தத் தேர்வுகள் மூன்றாம் பருவத் தேர்வுகளாக நடைபெற உள்ளன. பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கியது. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளன. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்தும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மே முதல் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

March 10, 2015

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை-அரசு பள்ளிஆசிரியர்களின் இந்த கோரிக்கைகள் நியாயமானவை; நிறைவேற்றப்பட வேண்டியவை.

அரசு ஊழியர் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை சேர்க்க வேண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர். அரசு பள்ளிஆசிரியர்களின் இந்த கோரிக்கைகள் நியாயமானவை; நிறைவேற்றப்பட வேண்டியவை. புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏழை- எளிய மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டதோ, அதேபோல், அரசு ஊழியர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டன. அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளில் முதன்மையானது ஓய்வூதியம் பெரும் உரிமை ஆகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு அவர்களின் கடைசி வாழ்நாள் வரை ஓய்வூதியமும், அவருக்குப் பின் அவரது வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கைத் துணைக்கும் சமூகப்பாதுகாப்பு உறுதி செய்யப் படுகிறது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதே தெரியவில்லை. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபின் இதுவரையில் அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட பணம் என்ன ஆனது? என்பதே தெரியவில்லை. ஓய்வூதியம் என்பது அரசு வழங்கும் சலுகை அல்ல... அரசு ஊழியர்களின் உரிமை ஆகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி அரசு ஊழியர்களுக்கு எந்த தேதியில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும். ஆனால், அரசு அறிமுகம் செய்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது சாத்தியமில்லை. அரசு ஊழியர் ஓய்வுபெறும் போது அவரது கணக்கில் உள்ள பணத்தில் 60% மட்டுமே வழங்கப்படும். மீதமுள்ள 40% பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும் என்பதால் அந்த பணம் திரும்பக் கிடைக்குமா? என்பதற்குக் கூட உத்தரவாதம் இல்லாத நிலைதான் காணப்படுகிறது. இதனால் ஓய்வுக்குப் பின் அரசு ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிறது. ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அதை நடைமுறைப் படுத்துவதில் ஏற்பட்ட முரண்பாடுகளை தமிழக அரசு இன்னும் களையாததும், மத்திய அரசு பள்ளிக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதும் சரியான நடவடிக்கைகள் அல்ல. தமிழகத்தில் தற்போது பணியிலிருக்கும் பட்டதாரி ஆசிரியர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2004 ஆம் ஆண்டில் ரூ.4000 என்ற மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு, அதன் பின் இரு ஆண்டுகள் கழித்து காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால், தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை பணிக்காலமாக கருத்தில் கொள்ள அரசு மறுப்பது ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். அதேபோல், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டும் போது, அகவிலைப்படியில் 50 விழுக்காடு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படுவது மரபாக உள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 113% என்ற அளவை எட்டி விட்ட பிறகும் அதில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க மத்திய, மாநில அரசுகள் தயங்குவது சரியல்ல. நியாயமான இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் ரூ.10,000 அடிப்படை ஊதியம் பெறும் ஓர் அரசு ஊழியருக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.50 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, ஏப்ரல் மற்றும் மே மாதம், சிறப்பு முகாம் நடத்தப்படும் நாட்களில், ஆதார் எண் பெறாதவர்களுக்காக, 'ஆதார் மெகா முகாம்' நடத்தப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில், தவறுகளை தவிர்க்க, வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் எண், இ - மெயில் முகவரி போன்றவற்றை சேகரிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இவற்றை சேகரித்த பின், வாக்காளரின் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படும். தேர்தல் கமிஷன் இணையதளம், இ - மெயில், எஸ்.எம்.எஸ்., மூலம், தேர்தல் கமிஷன் கேட்கும் விவரங்களை வழங்கலாம். இதுதவிர, ஏப்ரலில் இரண்டு நாட்கள், மே மாதம் இரண்டு நாட்கள், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனினும் பெரும்பாலானோர், ஆதார் எண் வாங்காமல் உள்ளனர். அவர்களுக்காக, வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தும் நாளில், 'ஆதார் மெகா முகாம்' நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது: 'மெகா முகாம்' நடத்தும்படி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளருக்கு, கடிதம் எழுதினோம்; அவர்களும் ஒப்புக் கொண்டனர். எந்தப் பகுதியில், குறைவான நபர்கள் ஆதார் எண் பெற்றுள்ளனரோ, அந்த பகுதியில் முகாம் நடத்தப்படும். ஆதார் எண் விண்ணப்பித்தவுடன் வழங்கப்படும் பதிவு எண்ணை, வாக்காளர் சிறப்பு முகாமில் வழங்கினால் போதும். அவருக்கு ஆதார் எண் வழங்கப்படும் போது, அந்த எண் நேரடியாக, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இவ்வாறு, சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

March 09, 2015

கிராமப்புற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கை: கல்வித்துறை திட்டம்.

வரும் கல்வியாண்டில், கிராமப்புற அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பள்ளிகளின் சிறப்புகளை முதன்மைப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவைதவிர, இடைநிலை வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பள்ளியின் மீதான விருப்பத்தை அதிகரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு, வரும் கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.தங்களின் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை ஆசிரியர்கள் முக்கியப்பணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.கிராமப்புற பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உத்தரவுவழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

March 05, 2015

இடைநிலை ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆணை நிதித்துறையிடம் வழங்கப்பட்டது!!!

நேற்று (02.03.2015) SSTA மாநில பொறுப்பாளர்கள் தலைமை செயலகம் சென்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை நிதித்துறை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் (செலவீனம் )மற்றும் ,நிதித்துறை இணை செயலாளர், துணைசெயலாளர் அவர்களை சந்தித்து நீதிமன்ற ஆணையை வழங்கினர், இணை செயலாளர் அவர்கள் முன்னரே இதுகுறித்து அறிந்தோம் என்றனர் இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். மேலும் ஊதியம் குறித்து பிற விபரங்களை பற்றி விபரங்கள் ௯றினோம்,அதுபற்றி அடுத்த கட்ட நடவடிக்கை SSTA சார்பில் விரைந்து எடுக்கப்படும் .மேலும் கல்வித்துறை செயலாளர் அவர்களையும் சந்தித்து CRC (Spl cl)பற்றியும் விரைந்து அரசாணை வெளியிட வலியுறுத்தப்பட்டது அவர்களும் விரைவாக ஆணை வெளியிடப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.அடுத்ததாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்திப்பு நடைபெற்றது அதில் பின்னேற்பு,சிறப்பு தற்செயல் விடுப்பு ,ஒருநாள் இடைவெளியில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தில் இருந்து தொடர முடியாமல் உள்ளது பற்றியும் ,மலை சுழற்சியினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பற்றியும் விரிவாக ௯றி அதற்கு விரைவாக முடிவு எட்ட கேட்டுக்கொள்ளப்பட்டது ,சிறப்பு தற்செயல் விடுப்பு ஆணை கல்வி செயலாளர் அலுவலகத்தில் சர்குலரில் உள்ளது விரைவாக வெளி வந்துவிடும் என உறுதி அளித்துள்ளார்கள். ஊதியத்திலும் அரசின் பதிலை பொறுத்து உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக உள்ளது. உண்மையாக போராடுவோம் !!இழந்ததை விரைவில் வென்றிடுவோம்!!

பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளிகளில் சுவரொட்டி

பிளஸ்-2 தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி தேர்வுமையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பெரிய அளவில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 80 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள். இன்று தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 31-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேர் எழுதுகிறார்கள்.இதற்காக 2 ஆயிரத்து 377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அனைத்தும் பள்ளிக்கூடங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு இன்று தொடங்குவதையொட்டி முன் ஏற்பாடுகளை கவனிக்க அனைத்து பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட 80 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.நேற்று தேர்வு மையங்களில் உள்ள பெஞ்சுகள் வரிசையாக போடப்பட்டு அந்த பெஞ்சுகளில் மீது மாணவர்களின் தேர்வு பதிவு எண் சாக்பீஸ் கொண்டு எழுதப்பட்டது. சுவரொட்டி மேலும் மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.இந்த சுவரொட்டிகளை ஏற்கனவே அரசு தேர்வுகள் இயக்குனரகம், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின் சார்பில் அச்சடிக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த சுவரொட்டியில் கூறப்பட்டு இருப்பதாவது:- பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்கள், தனித்தேர்வர்கள் கவனத்திற்கு, தேர்வறையில் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படுவார்கள். தேர்வறையில் அனுமதிக்காத துண்டுத்தாள், செல்போன், முதலியவை வைத்திருத்தல், வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்கத்தடை, தேர்வெழுத தடை, மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து செய்தல், நிறுத்தம் செய்தல் போன்ற தண்டனைகளுக்குள்ளாக நேரிடும். இதன் காரணமாக எதிர்காலமே பாதிக்கப்படலாம். எனவே தேர்வில் முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடவேண்டாம். இவ்வாறு அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.