இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான முதல் கட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் போட்டித் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும். போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்படுவர். மொத்தம் 95 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் 190 "அப்ஜெக்டிவ் டைப்' வினாக்கள் இடம்பெற்றிருக்கும் என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு இந்தத் தேர்வுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும். பெரும்பாலும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் போட்டித் தேர்வு நடைபெறும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். கடந்த 2012-ஆம் ஆண்டில், 1,028 சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஒருவர் தொடர்ந்த வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். போட்டித் தேர்வு, நேர்காணல் மூலம் சிறப்பு ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பு ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்குப் பதிலாக, பதிவு செய்தவர்களிலிருந்து போட்டித் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. பாடத்திட்டம்: இந்தத் தேர்வுக்காக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 5-ஆம் தேதி வெளியிட்டது. இதில், ஓவிய ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் குழப்பமளிக்கும் வகையில் உள்ளதாக புகார் எழுந்தது. ஓவிய ஆசிரியருக்கான தொழில்நுட்பத் தேர்வு அடிப்படையில் பாடத்திட்டம் இல்லை என்றும், 5 ஆண்டு நுண்கலை (பி.எஃப்.டி.) படிப்பு பாடத்திட்டத்துக்கு இணையாக அது அமைந்துள்ளதாகவும் சிறப்பு ஆசிரியர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment