scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

March 13, 2015

எஸ்.எஸ்.ஏ பயிற்சி நாட்களை வேலை நாட்களாக கணக்கிட ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஏ குறுவள மைய பயிற்சி நாட்களைபள்ளி வேலை நாட்களாக கணக்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (எஸ்எஸ்ஏ) மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் குறுவள மைய அளவில் ஆண்டிற்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இப்பயிற்சி நாட்கள் பணி நாட்களாக கணக்கில் கொள்ளப்பட்டது. கடந்த கல்வி ஆண்டுகளில் பள்ளி வேலை நாட்களை அந்தந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களே தயாரித்து வந்தனர். இதில் ஆண்டிற்கு 210 பள்ளி வேலை நாட்களுடன் 10 குறுவளமைய பயிற்சி நாட்களையும் சேர்த்து 220 நாட்கள் பணி நாட்களாக கணக்கிடப்பட்டது.ஆனால் தற்பொழுது மாநிலம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறை இயக்ககங்கள் மூலம் பள்ளி வேலை நாட்கள் அறிவிக்கப்படுகின்றன. இதில் பல்வேறு மாவட்டங்களில் குறுவளமைய பயிற்சி நாட்களை பணி நாட்களாகவோ அல்லது ஈடு செய்யும் தற்செயல் விடுப்பு நாட்களாகவோஅறிவித்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் சில ஒன்றியங்களில் ஈடு செய்யும் சிறப்பு தற்செயல் விடுப்பு, உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின்வாய்மொழி உத்தரவுப்படி எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர். பல ஒன்றியங்களில் இவ்விடுப்பு மறுக்கப்படுகிறது. தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் தற்செயல் விடுப்பு வழங்கி மற்ற ஆசிரியர்களுக்கு அனுமதி மறுப்பதும் நடந்து வருகிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், இந்த கல்வியாண்டில் பணி நாட்களை கணக்கிடுவதில் குழப்பம் நீடித்து வருகிறது. உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் இது குறித்து தெளிவான முடிவை அறிவிக்காமல் உள்ளனர். இதனால் ஆசிரியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே உடனடியாக ஈடு செய்யும் தற்செயல் விடுப்போ அல்லது பணி நாளாகவோ பயிற்சிநாட்களை அறிவிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்ச் 14ல் நடக்க இருக்கும் குறுவள மைய பயிற்சியில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார். 

1 comment:

  1. ஆசிரியர்கள் குறித்த செய்திகள் பள்ளி செய்திகள் மாணவர்களுக்கான செய்திகள் 10th 12th மெட்டீரியல் TNPSC TET PG TRB தேர்வுகளுக்கு இலவச பயிற்சி இலவச ஆன்லைன் டெஸ்ட் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு நிலை புதிய பணியிடம் குறித்த செய்திகள் தெளிவான கலந்துரையாடல் அனைத்து ஒரே வலைதளத்தில் www.gurugulam.com குருகுலம்.காம்

    ReplyDelete