காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம், டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பி.பி.ஏ. (சி.எஸ்), பி.பி.ஏ., பி.பி.ஏ (நேரடி 2ஆம் ஆண்டு), பி.பி.ஏ. வங்கியியல், பி.எஸ்சி-யில் சைக்காலஜி, ஐ.டி, ஐ.டி நேரடி இரண்டாமாண்டு, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் நேரடி இரண்டாமாண்டு, பி.காம்., பி.காம். நேரடி இரண்டாமாண்டு, பி.காம் (சி.ஏ), பி.காம் (சி.ஏ. நேரடி இரண்டாமாண்டு) மற்றும் பி.ஏ. வரலாறு பாடங்கள்.எம்.பி.ஏ. பொது (செமஸ்டர், நான்-செமஸ்ட்ர்), எம்.பி.ஏ-யில் ரீடெய்ல் மேனேஜ்மென்ட், லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட், டெக்னாலஜி மேனேஜ்மென்ட், இன்வெஸ்ட்மென்ட்மேனேஜ்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், டூரிஸம், ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்,எம்.பி.ஏ (5ஆண்டுகள்), கார்ப்பரேட் செகரட்டரிஷிப், எம்.காம் (பைனான்ஸ் அண்ட் கன்ட்ரோல்).எம்.எஸ்சி-யில் தாவரவியல், உயிரியல், ஐ.டி., இயற்பியல், வேதியியல், கல்வியியல், எம்.ஏ (பிஎம் அண்ட் ஐஆர்), எம்.ஏ (பிஎம் அண்ட் ஐஆர் நேரடி இரண்டாமாண்டு),எம்.ஏ (சிசி அண்ட் ஈ) மற்றும் எம்.ஏ. வரலாறு பாடங்களுக்கும், பி.ஜி.டி. யோகாகல்வி, பிஸினஸ் மேனேஜ்மென்ட், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், பிஎம் அண்ட் ஐஆர்,ஹெச்.ஆர்.எம்., பி.ஜி.டி. (ஹெச்.எ.) படிப்புகளுக்கும் www.algappauniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இம்முடிவு வெளியான 10 தினங்களுக்குள் (27.2.2015) மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம்பதிவிறக்கம் செய்து, கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை மூலம் செலுத்தி, தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு தேர்வாணையர் கா. உதயசூரியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment