சென்னை:
பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட, 'செல்வ மகள் சேமிப்பு
கணக்கு' திட்ட துவக்க விழா,
சென்னை,
மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில் நேற்று
நடந்தது.
பிரதமர்
நரேந்திர மோடி சமீபத்தில், 'சுகன்யா
சம்ரிதி' என்ற, 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு
திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம், தமிழகத்தில் முதலாவதாக, சென்னை, மயிலாப்பூர் தலைமை
அஞ்சலகத்தில், 'செல்வ மகள் சேமிப்பு
திட்டம்' என்ற பெயரில், நேற்று
துவக்கப்பட்டது. சென்னை வட்ட, தலைமை
போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின்
அலெக்சாண்டர், ஒன்றரை வயது பெண்
குழந்தை ரத்னாவிற்கு, முதல் பாஸ் புத்தகத்தை
வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். அவர்
பேசுகையில், ''இது, அறிமுகத் திட்டம்
என்பதால், நடப்பு ஆண்டில், 11 வயதிற்குட்பட்ட
குழந்தைகளும், இத்திட்டத்தில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.
பொதுமக்கள் இதன் மூலம் பயன்
பெற வேண்டும்,'' என்றார்.
சிறப்பு
அம்சங்கள்
* 10 வயதுக்குட்பட்ட
பெண் குழந்தைகளுக்கு காப்பாளர் மூலம் கணக்கு துவங்க
முடியும்.
* கணக்கு
துவங்க குறைந்தபட்ச தொகை, 1,000 ரூபாய்.
* ஒரு நிதியாண்டில், அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் வரை
செலுத்த முடியும். வட்டி விகிதம், 9.1 சதவீதம்.
* கணக்கு
துவங்கியதில் இருந்து, 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம்.
* கணக்கு
வைத்திருக்கும் பெண் குழந்தைகள், 18 வயது
முடிந்த பின், இருப்புத் தொகையில்
இருந்து அதிகபட்சம், 50 சதவீதம் மேற்படிப்பு அல்லது
திருமணத்திற்காக பெற்றுக் கொள்ள முடியும்.
* வாரிசு
நியமன வசதி இல்லை.
* குழந்தைக்கு
21 ஆண்டுகள் முடிந்த பின் கணக்கை
முடித்துக் கொள்ளலாம்.
* விருப்பத்தின்
படி மாதாந்திர வட்டி பெறும் வசதி
உள்ளது
No comments:
Post a Comment