scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 04, 2015

தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம்

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி SSTA சார்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது வழக்கு எண் WP-4420/2014 . வழக்கு கடந்த விசாரணையின் போது பதில் தாக்கல் செய்ய அரசுக்கு பல முறை அவகாசம் அளிக்கப்பட்டது. நீதிபதி அவர்கள் direction கொடுக்கலாமா என கேட்டபோது நீதிமன்றத்திற்குள்ளாகவே இறுதி தீர்வு வேண்டுமென SSTA சார்பாக கடந்த முறை (டிசம்பர் மாதம்)வேண்டப்பட்டது. இந்நிலையில் 28.01.2015 அன்று வழக்கு- கோர்ட்டில் எண் -8 வரிசை எண்-39 ஆக விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் மீண்டும் 4 வார கால அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி அவர்கள் அரசுக்கு பலமுறை கால அவகாசம் அளிக்கப்பட்டும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என கூறி 8 வாரத்திற்குள் பரிசீலித்து பதில் அளிக்க வேண்டும் என் வழக்கை முடித்து வைத்தார்கள். பதில் சாதகமாக இருந்தால் தமிழகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கிடைக்கும் இல்லை எனில் SSTA அதனை எதிர்த்து மீண்டும் தனது போராட்டத்தினை தொடரும் !!! """உச்சநீதிமன்றத்தில் தனித்து நின்று மாவட்ட மாறுதலில் வெற்றி பெற்றது """ போல இதிலும் வெற்றி பெற்று காட்டும்.பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்று தர SSTA அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து போராடி வருகிறது . வழக்கு வெற்றி பெறும் வரையில் SSTA ஓயாது.

No comments:

Post a Comment