தமிழகத்தில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை, சமீபத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டது.இதற்கான தேர்வு, ஜன., 10ம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில், கடந்த, 10ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
இதில், கடந்த, 25ம் தேதி காலை, சென்னையில் விண்ணப்பங்கள் காலியானதால், பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து, வேலுாரில் இருந்து விண்ணப்பங்கள் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டன.அன்று வரை, சென்னையில், 13 ஆயிரம் உட்பட, தமிழகம் முழுவதும், 1.40 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனதாக, டி.ஆர்.பி., வட்டாரத்தில் கூறப்பட்டது.
இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment