கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2015-2017ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் பல்வேறு துறைகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி:
இளங்கலை அல்லது முதுகலையில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய படிப்பில் ஏதுதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
கையேடு மற்றும் விண்ணப்பங்களை தபால் மூலம் பெற ரூ.500 வரைவோலை அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதிகள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு மார்ச் 29ல் நடைபெறுகிறது.
விண்ணப்பம் கிடைக்கும் மையங்கள்:
கோவை, சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மையங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment