பொது விநியோகத்திட்டத்தின் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற குடும்ப அட்டை அவசியம் என்கிற நிலையில் பழைய ரேசன் கார்டின் ஆயுட்காலம் மேலும் ஒராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தாக கூறப்படுகிறது. உணவுபொருள் விநியோகத்துறைக்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 33ஆயிரத்து 222 கடைகள் உள்ளன.
கடைசியாக, தமிழகத்தில் 2005ம் ஆண்டு பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய கார்டு வழங்கப்பட்டது.
அந்த கார்டு கடந்த 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பயன்படுத்த முடியும் என அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், 2010ம் புது கார்டு வழங்காமல், பழைய கார்டில் புதிதாக உள்தாள் ஒட்டப்பட்டது.
இதேபோல் கடந்த 5 ஆண்டுகளாக உள்தாள் ஒட்டி ரேசன் கார்டின் காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது வரும் ஆண்டிலும் புதிதாக தாள் ஒட்டி நீட்டிக்கப்படுகிறது.. அதன்படி 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை தற்போத உள்ள குடும்ப அட்டை செல்லத்தக்க காலம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment