முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட போட்டித்தேர்விற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நவ., 10 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
அதன் அறிவிப்பு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான(2013--14, 2014--15) போட்டி எழுத்துத்தேர்வு அடுத்தாண்டு ஜன., 10ல் நடக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் அத்தேர்விற்கான விண்ணப்பங்கள் நவ.,10 காலை 10 மணி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய். தேர்வுக் கட்டணம் 500 ரூபாய்; எஸ்.சி., எஸ்.டி.,க்கு 250 ரூபாய். விண்ணப்பங்கள் பெற மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் நவ.,25 மாலை 5.30 மணி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment