சென்னையில் நவ.,10, 11ல் நடக்கிறது
மாவட்டங்களில் சிறப்பாக பாடம் நடத்தும் 10ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு சென்னையில் நவ.,10, 11ல் கம்ப்யூட்டர் அனிமேஷன் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் 96 பேர் கலந்து கொள்கின்றனர். 10ம் வகுப்பில் கணித பாடத்தை சிறப்பாக நடத்தும் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் அனிமேஷன் தொடர்பான பயிற்சி சென்னையில் நவ.,10, 11 ஆகிய இரு நாட்கள் அளிக்கப்பட உள்ளது என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.
இதில் ஒரு மாவட்டத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கிலவழிப்பிரிவு ஆசிரியர்கள் 3 பேர் என 96 பேர் கலந்து கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சிக்கு அனுப்புமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்," கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் பொருட்டும், பாடம் தொடர்பாகவும் முதற்கட்டமாக இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. பின்னர் இவர்கள் மாவட்டங்களில் மற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதுகுறித்து பயிற்சியளிப்பர்,” என்றார்.
No comments:
Post a Comment