scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

September 13, 2014

TNTET"ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை'

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர் இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது தகுதிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.

மொத்தம் 72,888 பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்தச் சான்றிதழ்களை மூன்று வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியது.

ஆனால், பத்து நாள்களில் 50,276 பேர் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் முதல் முறையாக இணையதளத்திலிருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சான்றிதழ்களை 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். ஒவ்வொரு தேர்வரும் இரண்டு முறை மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

சான்றிதழ்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது தொடர்பாக செயல் விளக்கங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம்.

சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை எனக் கூறி சுமார் 400 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும்.

இதுவரை 22,612 பேர் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment