சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த வாதங்களே கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.
வாதிகளின் தரப்பில் அனுபவம் வாய்ந்த 4 வழக்குரைஞர்கள் வாதாடினார்கள். அவர்களில் திருமதி.நளினி சிதம்பரம், திரு.சங்கரன். போன்றோர் குறிப்பிடதக்கவர்கள்.
வாதிகளின் வழக்குரைஞர்களாகிய இவர்கள் 5% தளர்வு வழங்கியது தவறில்லை, ஆனால் முன் தேதியிட்டு வழங்கியது தவறென்றும், அரசியல் காரணங்களுக்காக 5% தளர்வு வழங்கப்பட்டதென்றும், SC&ST பிரிவினருக்கு 5% தளர்வு வழங்கியது தவறில்லை ஆனால் BC&MBC பிரிவினருக்கும் சேர்த்து 5% தளர்வு வழங்கியது தவறு. BC&MBC பிரிவினருக்கு 3% மட்டுமே தளர்வு வழங்கியிருக்க வேண்டும் என்றும் இது போன்ற மேலும் சில வாதங்களையும் முன்வைத்தனர்..
அரசு தரப்பில் வாதாடிய AG திரு.சோமையாஜி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வழக்குரைஞர் திரு.கிரிஷ்ணமூர்தி அவர்களும் தற்போது பின்பற்றப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளும் நீதிமன்றம் பரிந்துரைத்ததன் பேரிலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும்தான் பின்பற்றப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்கள்..
இன்று (16.09.2014) - 5% தளர்வு குறித்த விவாதமும்,G.O 71 குறித்த முழு விவாதமும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இந்த வழக்குகளுக்கான தீர்ப்பும் இந்த வார இறுதிக்குள் வரும் என்றும் நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment