'சென்னை பல்கலை தொலைதுார கல்வி இயக்க, இளங்கலை பட்டப்படிப்பு, டிசம்பர் மாத தேர்வுக்கு, அபராதம் இல்லாமல், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு:
சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி இயக்ககம் சார்பில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கு, அபராத கட்டணம் இன்றி, இம்மாதம், 30ம் தேதிக்குள்ளும், அபராதத்துடன் அக்., 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, ஆன் - லைனில் விண்ணப்பிப்பதுடன், அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதையும் இணைத்து, சமர்ப்பிக்க வேண்டும். ஆன் - லைனில் பதிவு செய்யாதவர்கள், தேர்வெழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment