வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீண் குமார், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க புதிய வாக்காளர்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி 2 மாதத்துக்குள் முடிக்கப்படும். இனிமேல் புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment