நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் எந்த மாவட்டத்தில் கலந்து கொண்டீர்களோ அந்த மாவட்டத்தில் தான் உங்கள் பணிநியமன கவுன்சலிங் நடைபெறும். கவுன்சலிங் தொடங்கும் நேரத்திற்கு முன்பே அங்கு சென்று விடுவதே நல்லது.
காலையில் நீங்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்ட மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும். வேறு மாவட்டத்தில் பணிநாடுவோர்க்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும். இருப்பினும் வேறு மாவட்டத்தில் பணிநாடுவோரும் காலையிலேயே கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு சென்று விட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த போது எந்தெந்த சான்றிதழ்கள் சமர்பித்தீர்களோ அந்த சான்றிதழ்களை மூன்று நகல்கள் எடுத்து அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று கொள்ளுங்கள்.
உங்கள் ஹால்டிக்கெட், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம், மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும் மூன்று நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள். இவற்றில் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்று தேவையில்லை.மத்திய அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் தேவையில்லை என்று மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும் மாநில அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எனவே சான்றிதழில் கையொப்பம் பெற்று செல்லவும்.
No comments:
Post a Comment