scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 16, 2014

கலவை சாதத்துடன் மசாலா முட்டை : சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

''தமிழகத்தில் உள்ள, அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, பல வகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும்,'' என, சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சென்னை, கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியேற்றி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்பது பழமொழி. 'ஏழை சொல் தான், புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும்' என்ற புதுமொழியை, தமிழகத்தில் நிலைநாட்டிக் கொண்டிருப்பது இந்த அரசு.விளை நிலங்கள் வழியே, 'கெய்ல்' நிறுவன குழாய் பதிப்பு திட்டம்; தஞ்சையில், 'மீத்தேன் எரிவாயு' திட்டம்; மரபணு மாற்று விதை திட்டம்; சில்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீடு போன்றவற்றை, உறுதியாக எதிர்க்கும் அரசாக உள்ளது.சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம், 9,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய்; அவர்களின் வாரிசுகளுக்கான குடும்ப ஓய்வூதியம், 4,500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.இதன் மூலம், 1,955 பேர் பயன்பெறுவர். அரசுக்கு, ஆண்டுக்கு 1.43 கோடி ரூபாய், கூடுதல் செலவாகும்.வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்து ராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, ஆகியோரின் வழித் தோன்றல்கள், வ.உ.சிதம்பரனாரின் பேரனுக்கு, 2,000 ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது, இனி, 4,500 ரூபாயாக, உயர்த்தப்படும். இதன் மூலம், 195 பேர் பயனடைவர். அரசுக்கு, ஆண்டுக்கு, 58.50 லட்சம் ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.

சத்துணவு திட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு ஒன்றியத்தில் உள்ள, அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று பள்ளிகளில் உள்ள, சத்துணவு மையங்களில், சோதனை அடிப்படையில், பல வகை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு, மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், தமிழகத்தில் உள்ள, அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, இத்திட்டம் நீட்டிக்கப்படும். இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு, 103.28 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment