பள்ளி
கல்வித் துறையில், 809 இளநிலை உதவியாளர்கள், அவரவர் சொந்த மாவட்டங்களில்,
நேற்று பணி நியமனம் செய்யப்பட்டனர். பள்ளி கல்வித் துறைக்கு, 1,395 இளநிலை
உதவியாளர் பணியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி., ஒதுக்கீடு செய்தது. இவர்களை பணி
நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்
தலைமையில், நேற்று நடந்தது.
முதலில்,
மாவட்டங்களுக்குள் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு,
நேற்று, 'ஆன்-லைன்' வழியில் நடந்தது. இதில், 809 பேர், அவரவர் சொந்த
மாவட்டங்களில் இருந்த காலி பணியிடங்களை தேர்வு செய்தனர்.
இவர்கள் அனைவருக்கும், நேற்றே, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சொந்த மாவட்டத்திற்குள் காலி பணியிடம் கிடைக்காதவர்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் பணியாற்ற விரும்பும் தேர்வர்களுக்கான கலந்தாய்வு, இன்று நடக்கிறது. இதில், 586 பேர், பணி நியமனம் செய்யப்படுவர்.
No comments:
Post a Comment