தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 29-ந்தேதி அன்று காலை, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளிலடங்கிய 2846 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.
இத்தேர்வுக்கென 6.25 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (ரிஜிஸ்ட்ரேசன் ஐ.டி.) உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப்பட்டியலில் (ரிஜிஸ்ட்ரேசன் லிஸ்டு ) கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
`நிராகரிப்புப்பட்டியலில் இடம்பெறாத, சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 23-ந் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் அறியலாம்
விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்ப பதிவு எண். விண்ணப்ப , தேர்வுக் கட்டணம் (ரூபாய்)கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கி, வங்கிக்கிளை அல்லது அஞ்சலக முகவரி:நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment