அஞ்சல் துறையின் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மே 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் தங்களுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அஞ்சல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சல் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணி இடங்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு மே 11-ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை www.pasadrexam2014.in என்ற இணையதளத்தில் பெற்று கொள்ளலாம். பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி, நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment