scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

May 13, 2014

முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை

 தமிழகத்தில்  எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.. ஆகிய தொழில் படிப்புகளில் சேரும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் (முதல்தலைமுறை) பிரிவைச்சேர்ந்த மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விலக்கு அளித்து வருகிறது. எம்.பி.பி.எஸ்., பி.. படிப்புகளில் ஆண்டுக் கட்டணத்தில்தான்கல்விக் கட்டணம் இடம்பெறுவதால், கல்விக் கட்டணத்துக்கு மட்டுமே முழு விலக்குச் சலுகை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10,495.
இந்தக் கட்டணத்தில் கல்விக் கட்டணம் ரூ.4,000-த்துக்கு மட்டும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை ரூ.6,495- முதல் தலைமுறை தகுதி மாணவர்கள் செலுத்தியாக வேண்டும்.இதேபோன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுஎம்.பி.பி.எஸ். அல்லது அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேரும் முதல் தலைமுறை தகுதியைப் பெறும் மாணவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.2.5 லட்சமாக இருக்கும் நிலையில், கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சத்தைச் செலுத்தத் தேவையில்லை.சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ் இடத்துக்கான முழுச்சலுகைக்கான கல்விக் கட்டண விவரம் சுயநிதி கல்லூரிகளின் பெயருடன் விண்ணப்ப தகவல் தொகுப்பேட்டில் அச்சிடப்படுகிறது. அதிலிருந்து கல்விக் கட்டணச் சலுகையை முதல்தலைமுறை மாணவர்கள்தெரிந்து கொள்ளலாம்.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ் படிப்புக்கு கடந்த கல்வி ஆண்டில் (2010-11) ஏற்றுக் கொள்ளப்பட்ட 17,610 விண்ணப்பங்களில், முதல் தலைமுறை (குடும்பத்தில் முதல் பட்டதாரி) சலுகையைப் பெற விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை6,440. இவர்களில் மருத்துவக் கல்லூரி அனுமதி கிடைத்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தோருக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000 சலுகை அளிக்கப்பட்டது.ஒரு குடும்பத்தில் முதல் முறையாக பட்டப்படிப்பை படிக்க வரும்மாணவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த சலுகையை அரசு வழங்கியுள்ளது. அதன்படி, விவசாயக் குடும்பத்தில் இருந்தோ, கூலித் தொழிலாளியின் குடும்பத்தில் இருந்தோ முதல் முறையாக தொழில் கல்வியில் பட்டப்படிப்பை படிக்க வரும் மாணவ, மாணவியர், இந்த சலுகையை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment