நேற்று மதியம் பள்ளிக்கல்வி இயக்குநருடன்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி
தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ்
உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் பொழுது
தற்பொழுது நடைமுறையில் உள்ள விதிகளை மாற்றி (அதே பள்ளியில்
பணிப்புரிபவர்கள் மட்டும் மாறுதலுக்கு அனுமதித்தல்) அதே பள்ளியில்
பணிப்புரிபவர்கள் விருப்பின்மை தெரிவித்தால்
ஒன்றியத்தில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாறுதல்
வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அலகு விட்டு அலகு மாறுதல் வழங்க
இந்தாண்டு நடவ்டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இச்சந்திப்பின்
பொழுது மாநில தலைவர் மணி, தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், மாநில துணைத்
தலைவர் ரக்ஷித் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment