scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

May 13, 2014

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் கட்டாய விடுமுறை அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் முடிவு

  நேற்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் குறைத்தீர் முகாம் நடத்தப்படுகிறது. கடந்தாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கியதால், குறைத்தீர் முகாமில் ஆசிரியர்களால் கலந்துகொள்ள இயலவில்லை. இதனால் வரும் கல்வியாண்டு முதல், முதற் சனிக்கிழமை கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது,
அதை உடனடியாக நாட்காட்டி தயாரிக்கும் உதவியாளரிடம் உடனடியாக தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு மாற்றியமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். 

மேலும் ஆங்கில வழிக் கல்வியை நிதியுதவி பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. 

கடவுச் சீட்டு பெறுவதற்கான அனுமதி நியமன அலுவலருக்கு வழங்கியதை போல், வீட்டு கட்ட முன்பணம் பெறுவதற்கான அனுமதியை நியமன அலுவலரே வழங்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதற்கான வழிகள் செய்யப்படும் என இயக்குநர் தெரிவித்தார். இச்சந்திப்பின் பொழுது மாநில தலைவர் மணி, தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், மாநில துணைத் தலைவர் ரக்ஷித் ஆகியோர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment