முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 3 பேருக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.
தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் பச்சைமால், பி.வி.ரமணா மற்றும் தாமோதரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண் துறையும், எஸ்.பி.வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையும், கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment