scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

May 16, 2014

பி.இ. மற்றும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசித் தேதியை நீட்டிக்க கோரிக்கை

கடந்த 9ம் தேதி ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. 7.44 லட்சம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். பி.இ. படிப்பில் சேர ஒரு வாரத்தில் 1.68 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையானது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவ படிப்புக்கு மே 28ம் தேதிக்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்கும் முதல் பட்டதாரி சான்று, வருவாய் மற்றும் இருப்பிட சான்றுகளில் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., துணை தாசில்தார் மற்றும் தாசில்தார் ஆகியோர் கையெழுத்து போட்டு சான்று வழங்க வேண்டும்.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. அதற்கான பயிற்சிக்கு வருவாய்த்துறையினர் சென்றுவிட்டதால் இன்றும் (மே 15) நாளையும் கையெழுத்து பெற முடியாது.
17 மற்றும் 18ம் தேதி சனி ஞாயிறு விடுமுறை என்பதால் அப்பொழுதும் கையெழுத்து பெற முடியாது. 19ம் தேதி ஒரு நாள் மட்டும் உள்ளதால் மாணவர்கள் கையெழுத்து பெற்று விண்ணப்பம் அனுப்பி வைக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பி.இ. மற்றும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறும் கடைசி நாள் தேதியை நீட்டித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என மாணவர்களது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment