scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 13, 2014

மே முதல் வாரத்தில் பொறியியல் விண்ணப்பம் : அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பம், மே முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகள், தகுதிகள் குறித்து, பல்வேறு அறிவிப்புகளை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. "மே, 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும்' என, ஏற்கனவே, தேர்வுத்துறை அறிவித்துவிட்டது. இதையடுத்து, பொறியியல் சேர்க்கை பணிகளை, அண்ணா பல்கலை துவக்கி உள்ளது. www.annauniv.edu என்ற, பல்கலை இணையதளத்தில், "டிஎன்இஏ - 2014' என, தனி பகுதியை, பல்கலை துவக்கி உள்ளது. அதில், பொறியியல் விண்ணப்பம், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவர்கள், எப்படி தயாராக வேண்டும் என்பதையும் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்காத மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான, இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி மாணவராக இருந்தால், அரசிடம் இருந்து, அதற்கான கட்டண சலுகையை பெற, தாசில்தாரிடம் இருந்து சான்றிதழ் ஆகியவற்றை பெற வேண்டும். இதற்கான படிவங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. விண்ணப்பம் வழங்கப்படும் இடங்கள், தகுதிகள் உள்ளிட்ட மேலும் பல விவரங்கள், விரைவில் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment