scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 14, 2014

தொடக்கக்கல்விதுறையில் இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறைபடுத்திட தொடரப்பட்ட வழக்கு வருகிற 24.04.2014 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

அரசாணை எண்.1383/கல்வி/1988, நாள்.23.08.1988 (தொடக்கக் கல்வி சார்நிலை பணி விதிகள்) விதி 9 ஆனது உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14,15 மற்றும் 16க்கு எதிராக உள்ளது.
ஒன்றிய அளவில் பதவி உயர்வு வழங்குவது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் அரசு 4வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் அரசு இன்று வரை பதில் தாக்கல் செய்யவில்லை.

மாநில அளவில் பதவி உயர்வு

வழக்கு அரசு சார்பில் பதில் தாக்கல் செய்யாத நிலையில் இறுதி விசாரணைக்கு வர உள்ளது .மேலும் இந்த தொடர்ந்து நடத்தி வெற்றி பெற தங்கள் ஆதரவை வேண்டுகிறோம். தொடர்புக்கு கிப்சன், 9443464081.

இந்த வழக்கிற்கு தீர்ப்பு வந்து விட்டல் வருகிற 2014 ஆண்டிற்கானபதவி உயர்வு மாநில சீனியரிட்டி படி தான் நடத்திட வேண்டும். மேலும் தலைமையாசிரியர்கள் அதே நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிமாறுதல் பெறலாம்.பள்ளிக்கல்வித்துறை போல் தொடக்கக் கல்வி துறையிலும் ஒரே விதி முறை பின்பற்றிட வேண்டும் .எங்கு பணி மாறுதல் பெற்றாலும் சீனியரிட்டி பாதிப்பு இல்லாமல் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், தலைமையாசிரியர்கள் அதேநிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிமாறுதல் பெற வேண்டும் என்பதற்காக தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நமது சங்கம் சார்பில் நடத்தி வருகிறோம். வெற்றி பெற தங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment