scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 26, 2014

பிளஸ்-2 விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே மாதம் 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல்
பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள், தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் கோரியோ அல்லது மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் மே மாதம் 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிவரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்றபிறகு அவர்கள் மறுகூட்டல் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்
பகுதி-1 மொழி - ரூ.550
பகுதி- 2 மொழி (ஆங்கிலம்) ரூ.550
ஏனைய பாடங்கள்
(ஒவ்வொன்றிற்கும்) ரூ.275
மறுகூட்டல் கட்டணம்
பகுதி-1 மொழி, பகுதி -2 மொழி (ஆங்கிலம்)மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.305. ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தவேண்டும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் இயலும்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.
இந்த தகவலை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment