scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

March 01, 2014

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டையும் கவனிக்க வழிவகைகளை எடுக்க இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப்பொறுப்பாளர்கள் பொதுசெயலர் திருமிகு செ.முத்துசாமி தலைமையில் ஆலோசனை.

நேற்று 6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி வெங்கடாஜலமூர்த்தி அவர்கள் தலைமையில் 2முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனினும்

இக்குழு20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் உள்ள இந்த ஊதிய முரண்பாடை அரசு அகற்ற வேண்டும். அதற்கு, சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் தனிநபர் ஊதியக் குறை தீர்வு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு நியமித்துக் கொள்ளலாம். புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக தகுந்த விதிமுறைகளை இந்தக் குழுவுக்கு அரசு வழங்க வேண்டும்.
இந்த உத்தரவின் நகலை பெற்ற நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள் இந்தக் குழுவை அரசு நியமிக்க வேண்டும். இந்தக் குழு ஆய்வு செய்து புதிய ஊதிய விகித்தை நியமிக்கும் வரை கடந்த 2011 மற்றும் 2013-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடமுறைப்படுத்தக் கூடாது. அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய அளவு குறைந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்
இதில் குறிப்பிட்ட துறைகள் தவிர பிர துறைகளின் கோரிக்கைகளையும் அரசு ஒப்புய்தலுடன் பரிசீலனை செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளதாக அறிகிறோம்.எனவே இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டையும்  கவனிக்க வழிவகைகளை எடுக்க இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப்பொறுப்பாளர்கள் பொதுசெயலர் திருமிகு செ.முத்துசாமி தலைமையில்  ஆலோசனைநடத்தப்பட்டது.

இக்குழுவில் நமது கோரிக்கையாக இடைநிலை ஆசிரியரின் தரஊதியக்குறைப்பை நீக்கி மத்திய அரசுக்கு இணையாக அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க எல்லா வழிவகைகளும் ஆராயப்பட்டன.

கடந்த 1988 ஆம் ஆண்டு 5வது ஊதியக்குழு குறைபாட்டிணை ஓய்வுபெற்ற நீதிபதி திருஇராமானுஜம் தலைமையிலான குழுவே பாதிப்பின்றி தீர்த்ததையும்  நினைவு கூறப்பட்டது.

இதுவரை அமைக்கப்பட்ட குழுக்கள் எல்லாம் அதிகாரிகளைக்கொண்டதே என்றும் ,தற்போது நீதிமன்றத்தின் மூலமாக ஓய்வுபெற்ற நீதிபதி அமைக்கப்பட்டுள்ள இக்குழு இடைநிலை ஆசிரியர் பிரச்சினையில் நியாயம் வழங்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டவுடன் கோரிக்கை அளிப்பது என்றும் அவ்வாறு இயலாவிடில் நீதிமன்றம் மூலம் கோரிக்கை மனு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தகவல்
கே.பி.ரக்‌ஷித்
மாநில துணைத்தலைவர்

No comments:

Post a Comment