பிளஸ்–2 தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெற
உள்ளது. இந்த தேர்வு எழுத ‘சிறப்பு அனுமதி திட்டத்தின்’ (தக்கல்) கீழ்
விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று (வியாழக்கிழமை) மதியம் முதல் (www.tndge.in) என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண்ணையும், பிறந்த தேதியினையும் பதிவு செய்து ‘ஹால்டிக்கெட்’டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும்
செய்முறைத்தேர்வு செய்ய வேண்டிய தேதிகள் பற்றிய விவரங்கள் குறித்து,
தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தின்
முதன்மை கண் காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே உரிய நேரத்தில் பிளஸ்–2 தேர்வு எழுத
ஆன்–லைனில் விண்ணப்பித்து ஹால்டிக்கெட்டுகளை இதுவரையில் பதிவிறக்கம் செய்து
பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்களும், மேற்குறிப்பிட்ட இணைய தளத்தின் மூலம்
உடனடியாக ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment