scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 27, 2014

1.30 லட்சம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாளும் பயிற்சி: பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெறுகிறது

'தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கு, தயார் நிலையில் உள்ளோம். 60,000 ஓட்டுச்சாவடிகள் வரை அமைக்கப்படும். 20 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், தற்போதைக்கு, 60,418 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை, அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 70,000 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு தொகுதியில், வேட்பாளர் எண்ணிக்கை, 15க்கு மேல் இருந்தால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், கடைசி பட்டன், யாருக்கும் ஓட்டு இல்லை என்பதை குறிக்கும், 'நோட்டோ' பட்டனாக பயன்படுத்தப்படும்.

பயிற்சி:
தற்போதுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எந்த சின்னத்திற்கு ஓட்டுப் போடுகிறோம் என்பதை, வாக்காளர் அறியும் வசதி இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தலா 14 தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பும் முடிந்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு ஊழியர்களுக்கு, பயிற்சி அளிக்க, 130 பேருக்கு பயிற்றுனருக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், 5,500 மண்டல அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கின்றனர். அவர்கள் உதவியுடன், 1.30 லட்சம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, இம்மாதம் 26ம் தேதியில் இருந்து, 28ம் தேதி வரை, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாளும் முறை குறித்து, பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஆறு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், மாஜிஸ்திரேட் அந்தஸ்து கொண்ட அதிகாரி, ஒரு வீடியோ கிராபர், மூன்று போலீசார் இருப்பர். இவர்களுக்கு, இன்றும், நாளையும், பயிற்சி வகுப்பு நடக்கிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், சென்னையில், 28ம் தேதி, தேர்தல் பணி குறித்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.




ஒருங்கிணைப்பு:
தினமும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், கலெக்டரிடம், தேர்தல் பணி குறித்து விவாதிக்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில், தேர்தல் பணிகளை கவனிக்க, 11 தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, தலா, இரண்டு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மாவட்டங்களில் உள்ள, தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்களுடன் பேசி, தேர்தல் பணிகளை, கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில், தேர்தல் பணியில், போலீஸ் அல்லாத பணியாளர்களாக, 3.50 லட்சம் பேர், போலீசார் ஒரு லட்சம் பேர், ஈடுபடுத்தப்படுவர். பதற்றமான ஓட்டுச்சாவடி, அதிக ஓட்டுப் பதிவு நடைபெறும் ஓட்டுச்சாவடியை கண்டறியும் பணி நடந்து வருகிறது. அங்கு, 'மைக்ரோ அப்சர்வர்' களாக, மத்திய அரசு அலுவலர்கள் நியமிக்கப்படுவர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், டெபாசிட்டாக, 25,000 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், அதில், 50 சதவீதம் செலுத்தினால் போதும்.




தேர்தலுக்கு தயார்:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது நிறுத்தப்படும். வழக்கமான திட்டப் பணிகள் நிறைவேற்றுவதில், தடை கிடையாது. தமிழகத்தில், 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 9 லட்சம் பேர், புதிய வாக்காளர்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், வேட்பு மனு தாக்கல் முடிவடைவதற்கு, 10 நாட்களுக்கு முன் வரை, மனு கொடுக்கலாம். கடந்த தேர்தலில், 10 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்பட்டது. இந்த தேர்தலில், 20 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்படும். லோக்சபா தேர்தலுக்கு, தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு, பிரவீண்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment