பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு நடக்கும் நேரங்களில் கேள்வித்தாள் வினியோகம் செய்யும்
பொறுப்பு தலைமை ஆசிரியரிகளிடம்
ஒப்படைக்கப்படுவதால், கேள்வித்தாள்
வெளியானால் அவர்கள் தான்
பொறுப்பு என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதியும் தொடங்குகின்றன. தேர்வை குழப்பம் இல்லாமல் நடத்துவதற்காக
தேர்வுத் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து
வருகிறது. தேர்வு நடக்கும் நாளில் ஒவ்வொரு பாடத் தேர்வின் போதும் அன்றைய
தேர்வுக்குரிய கேள்வித்தாளை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அந்தந்த தேர்வு
மையங்களுக்கு எடுத்து சென்று சப்ளை செய்ய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும்
கேள்வித்தாள் காப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
கேள்வித்தாள் காப்பு மையத்தில் இருந்து
வேன் அல்லது காரில் கேள்வித்தாள் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில்
ஒப்படைக்கப்படும்.காலை 8
மணிக்குள் கேள்வித்தாள் வந்து சேரும்.கடந்த ஆண்டுகளில் தேர்வு மையத்தில்
இருந்து யாராவது ஒருவர் கேள்வித்தாள் காப்பு
மையங்களுக்கு சென்று கேள்வித்தாளை
வாங்கி வர வேண்டிய நிலை இருந்தது. அதனால் பல சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் இந்த
ஆண்டு காப்பு மையங்களில் இருந்தே
அதிகாரிகள் கேள்வித்தாளை தேர்வு மையங்களுக்கு சப்ளை செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு மையங்களுக்கு வரும் கேள்வித்தாள் கட்டுகளை அந்த பள்ளியில் தேர்வு
மைய முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள் தான்
பிரிக்க வேண்டும்.
அந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு அறைகளில் எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவரே கேள்வித்தாளை பிரித்து கொடுக்க வேண்டும்.இதில் ஏதாவது தவறு நேர்ந்தால் கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.காப்பு மையங்களில் இருந்து கேள்வித்தாள் மையங்களுக்கே நேரடியாக சப்ளை செய்யும் முறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் கால விரயம் குறைகிறது. தேர்வு முடிந்த பிறகு தேர்வு அறை மேற்பார்வையாளர்களே விடைத்தாள்களை பெற்று அதை ஒரு கவரில் போட்டு சீல் வைக்க வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment