scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 21, 2014

குரூப் 4 தேர்வுக்கு நாளை 6ம் கட்ட கவுன்சலிங் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார்  வெளியிட்ட அறிக்கை:  டிஎன்பிஎஸ்சியால் (2007- 2008, 2012- 2013ம் ஆண்டுக்கான) குரூப் 4ல்  அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 7.7.2012ல்  நடைபெற்றது. இப்பணியில் மீதமுள்ள  88 காலிப் பணியிடங்களுக்கான 6ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங் முறையிலான துறை ஒதுக்கீடு நாளை காலை 8.30 மணி முதல்  பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர், பதிவெண் மற்றும்  கவுன்சலிங்குக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் www.tnpsc.gov.in, www.tnpsc exams.net என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்கள் தங்களது மூலச் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இடப்பட்ட ஜெராக்ஸ் சான்றிதழை தவறாமல் கொண்டு வர வேண்டும்.  முதன்மை பட்டியலில் இருந்து தற்காலிகமாக தேர்ச்சி பெற்றுள்ள 88 பேரில் எவரேனும் 22ம் தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்  கவுன்சலிங் போது வருகை புரியாமை மற்றும் இப்பதவியில் சேர விருப்பமின்மை, ஏதாவது காரணங்களுக்காக விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாமை  போன்ற காரணங்களால் ஏற்படும் காலிப்பணியிடங்களை மட்டுமே நிரப்ப, தேர்வாணைய இணையதளத்தில் 51 பேரின் பதிவெண்கள்  வெளியிடப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் மற்றும் வகுப்பின் படியும் அப்போதுள்ள  காலிப்பணியிடங்களுக்கேற்ப கவுன் சலிங்கிற்கு அனுமதிக்கபடுவர். வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு விஜயகுமார்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment