காலி
பணியிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.12ம் தேதி
ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி
மையங்களின் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களின் கூட்டமைப்பு சார்பில்
மாநில பிரதிநிதிகள் மாநாடு, பாரிமுனை ராஜா அண் ணாமலை மன்றத்தில் நேற்று
நடந்தது. சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜயபாண்டியன், தமிழ்நாடு
ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் மு.வரதராஜன்
மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், கே.தமிழரசி,
சி.குணசேகரன், கு.தமிழரசன், எஸ்.ஜானகி உள்பட பலர் பங்கேற்றனர்.
உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு, சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கு
தனித்துறை ஏற்படுத்தி, ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும்
ஓய்வூதியம், காலி பணியிடங்களை நிரப்புதல், பணியின் போது இறந்த பணியாளர்
வாரிசுகளுக்கு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 12ம் தேதி
மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த மாநாட்டில் முடிவு
செய்யப் பட்டது.
No comments:
Post a Comment