scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 31, 2013

மாவட்டத்தை பசுமையாக மாற்ற ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்

மழை வளம் பெற ஈரோடு மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசினார்.


ஈரோடு யு.ஆர்.சி.,மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கல்வித்துறை சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, அரசு பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடந்தது.

டி.ஆர்.ஓ., கணேஷ் தலைமை வகித்தார். சி.இ.ஓ., அய்யண்ணன் வரவேற்றார். சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசியதாவது:

"தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்தி வரும் ஆசிரியர்கள், தொடர்ந்து இதே போன்று பாடுபட வேண்டும். 16,15 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 2562.79 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களும் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. பதினோராம் வகுப்பு படிக்கும் 12.61 மாணவ, மாணவிகளுக்கு, 395.18 கோடி ரூபாயில் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 22 கலைக்கல்லூரிகள், 10 பாலிடெக்னிக்கள், 23 பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில், 2012ம் ஆண்டு 93.35 சதவீதம், 2013ம் ஆண்டில் 94.28 பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளன. இம்மாவட்டத்தை முதலிடத்திற்கு உயர்த்த வேண்டும். ஆங்கில வழி கல்வி இம்மாவட்டத்தில் 54 பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தை பசுமை மாவட்டமாக உருவாக்க வேண்டும். 32 சதவீத காடுகள் இருந்த நிலை மாறி, இன்று 12 சதவீதம் காடுகள் மட்டுமே உள்ளன. இவற்றின் மூலம் பருவ காலம் மாறி நோய்களும், வறட்சியும் ஏற்படுகிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். அதை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டம் வீட்டில் அமைக்க வேண்டும். இதன் மூலம் உப்பு தண்ணீரும் நல்ல குடிநீராக மாறி விடும்." இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment