scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 31, 2013

தமிழகம் முழுவதும் '104' முதலுதவி சேவை விரைவில் அறிமுகம்.

தமிழகம் முழுவதும் 104 அவசரகால முதலுதவி சேவை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை 108 என்ற ஹெல்ப் லைன் எண்ணுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில்,
அவசரகாலங்களில் முதலுதவி செய்ய முடியாமல் பலர் உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் முதலுதவி கிடைக்காதவர்கள் உயிரிழப்பை சந்திக்கின்றனர். இதனை தவிர்க்க 104 என்ற ஹெல்ப் லைன் சேவை எண்ணுடன் முதலுதவி ஆலோசனை கூறும் மையம் ஒன்று தமிழகத்தில் விரைவில் தொடங்கப்படுகிறது.இதற்காக அமைக்கப்படும் மையத்தில் டாக்டர்கள் கொண்ட குழு தயார் நிலையில் இருக்கும்.

104 ஹெல்ப் லைன் எண் மூலம் தொடர்பு கொள்ளும்போது, மையத்தில் உள்ள டாக்டர்கள், இருக்கும் இடத்தில் உள்ள வசதிகளை கொண்டே பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வழிமுறைகளை கூறுவர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு நிமிடங்களில் முதலுதவி சிகிச்சை கிடைக்கும். அதன்பிறகு ஆம்புலன்ஸ் அல்லது வேறு வகையிலோ மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்று காப்பாற்ற முடியும்.இதன் மூலம் முதலுதவி கிடைக்காமல் இறப்பவர்களின் விகிதத்தையும் குறைக்க முடியும். இந்த சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைக்க இருந்ததாகவும், ஆனால், பல மாவட்டங்களில் அதற்கான தயாரிப்புகள் முடிவடையாததால் தடை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த சேவை அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment