மதுரை மாவட்ட ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டையில் குழப்பம் இருந்தால், அரசு ஊழியர்களுக்கான மாவட்ட காப்பீட்டுத் திட்டஅலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,'' என, ஒருங்கிணைப்பாளர்
பழனி கூறினார்.அவர் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டைகளில், பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படங்கள் மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நிறுவன "ஆன்லைன்' முகவரிக்கு சென்று, குடும்ப நபர்களை புதிதாக சேர்ப்பது அல்லது நீக்குவது, பெயர் மற்றும் வயது திருத்தம் போன்ற திருத்தங்களைமேற்கொள்ளவும் வசதி உள்ளது."ஆன்லைனில்' திருத்தங்கள் மேற்கொள்ள முடியாதவர்கள், "மதுரை நேதாஜி ரோடு, 46, தாமஸ் காம்ப்ளக்சில்' செயல்பட்டு வரும் மாவட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று தீர்வுகாணலாம் அல்லது 73737 03114ல் தொடர்புகொள்ளலாம். அட்டையில் பெயர், புகைப்படம் மாறியிருப்பதால், பயனாளிகளுக்கு சிகிச்சை பெறுவதில் பாதிப்பு ஏற்படாது, என்றார்.
No comments:
Post a Comment