தமிழ்நாடு பொதுத்துறை முதன்மை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான
நெல்சன் ஆர்.மண்டேலா கடந்த 5–ந் தேதி மரணமடைந்துள்ளார். அவருக்கு மரியாதை
செலுத்தும் விதமாக, டிசம்பர் 6–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை தமிழக அரசு
சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில், தமிழகம் முழுவதும்
தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும்
ரத்து செய்யப்படுகிறது. இதுசம்பந்தமாக அனைத்து துறை அதிகாரிகள் தகுந்த
நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment