scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 17, 2013

மதிப்பீட்டு தரத்தை உயர்த்தும் டி.என்.பி.எஸ்.சி.,: அரசுப் பணி இனி சவால்தான்:

குரூப்-1, குரூப்-2 உட்பட அனைத்து தேர்வுகளின் மதிப்பீட்டு தரத்தை அதிகரிக்க அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளது. புதிய பாடத் திட்டங்களே, உயர் தரத்தில் இருக்கும் வகையில் மதிப்பீட்டு தரத்தை மேலும் உயர்த்துவதன் மூலம் அரசு வேலையில் சேர்வது என்பது, இளைஞர்களுக்கு, சவாலாகவே இருக்கும்.
பல வகை தேர்வுகளின் பாடத் திட்டங்களை மாற்றாமல், அரைத்த மாவையே திரும்ப திரும்ப, டி.என்.பி.எஸ்.சி., அரைத்துக் கொண்டிருந்த நிலையை முன்னாள் தலைவர், நட்ராஜ் மாற்றினார். அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை மாற்றி, உயர் தரத்துடன் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். குரூப் - 1, குரூப் - 2, குரூப் - 4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களும், தற்போது தரமான வகையில் இருப்பதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.
கேள்வி கேட்கும் விதமும் மாறியுள்ளது. நேரடியாக கேட்காமல், தேர்வரின் கூர்மையான அறிவை சோதிக்கும் வகையில், கேள்விகள் கேட்கப்படுகின்றன. சமீபத்தில் நடந்த, குரூப் - 2 தேர்வும், இந்த முறையிலேயே அமைந்தது. இதனால், தற்போதுள்ள நிலையிலேயே தேர்வில் தேர்வு பெறுவது என்பது, குதிரை கொம்பாக உள்ளது.
இந்நிலையில், விவரித்தல் (விளக்கமாக விடை எழுதுதல்) முறையை மாற்றி, மதிப்பீட்டு தரத்தை மேலும் அதிகரிக்க, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சமீபத்தில் முதல் கூட்டமும் நடந்து முடிந்தது. இதில், மதிப்பீட்டு தரத்தை எப்படி எல்லாம் உயர்த்தலாம் என்பது குறித்து உறுப்பினர்களுடன் டி.என்.பி.எஸ்.சி., ஆலோசனை நடத்தியது. இனி அடுத்தடுத்து நடக்கும் ஒரு சில கூட்டங்களுக்குப் பின் முடிவு அறிவிக்கப்படும் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவரித்து விடை அளிக்கும் முறையில், இனி கண்டபடி கதை விட முடியாது. சரக்கு இருந்தால் தான் மதிப்பெண் கிடைக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் இடம்பெற வேண்டிய முக்கிய கருத்துகள், அதை வெளிப்படுத்தும் முறை என நுணுக்கமாக பார்த்து மதிப்பெண் அளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே அரசு வேலை என்பது இனி, இளைஞர்களுக்கு, சவாலாகவே இருக்கும்.

No comments:

Post a Comment