மாணவர்கள் மேல்படிப்பை தொடரும் பட்சத்தில், மத்திய அரசு சார்பில்,
வழங்கப்படும் ரூ.1500 கல்வி உதவித்தொகைக்காக, தேசிய திறனாய்வு தேர்வு
ஆண்டுதோறும், டிசம்பரில் நடத்தப்படுகிறது. மாநில தேர்வு வாரியம் இதற்கான
தேர்வை நடத்துகிறது.ஏழாம் வகுப்பு ஆண்டு இறுதிதேர்வில், எஸ்.சி.,
எஸ்.டி.,மாணவர்கள் 50 மதிப்பெண்ணும், மற்ற மாணவர்கள் 55 சதவீத
மதிப்பெண்ணும் பெற்றிருந்தால், இத்தேர்வை எழுதலாம். அறிவியலில் 35,
கணிதத்தில் 20, சமூக அறிவியலில் 35 மதிப்பெண் என மொத்தம் 90
மதிப்பெண்ணுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கானவிண்ணப்பங்கள்,
ஆண்டுதோறும் நவம்பரில் வெளியிடப்படும்.கடந்த ஆண்டு, நவ.1 முதல் 9ம்
தேதிக்குள், அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்க
அறிவுறுத்தப்பட்டு, டிசம்பர் 30ம் தேதி தேர்வு நடந்தது. ஆசிரியர் ஒருவர்
கூறும்போது: டிசம்பரில், அரையாண்டு தேர்வு தொடங்குவதை முன்னிட்டு,
முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்படுவதால், மாணவர்கள் தேசிய திறனாய்வு
தேர்வுக்கும் தயாராகி வந்தனர்.இந்த ஆண்டு, மாநில தேர்வு வாரியம், இதற்கான
அறிவிப்பையோ, ஆன்-லைனில் விண்ணப்பத்தையோ வெளியிடவில்லை. அத்தேர்வை
எதிர்கொண்டுள்ள ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு விரைவில்
அறிவிப்பை வெளியிட்டு தேர்வை நடத்த முன்வரவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment