லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், புதிய
வாக்காளர் சேர்க்கைக்காக மனுதரலாம், என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
2014 ஜன.,1ஐ தகுதி நாளாகக்கொண்டு, 18 வயது நிரம்பியோர், தங்களது பெயர்களை
வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட
வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணிக்காக, அக்.,1 முதல் 31 வரை
மனுக்கள் பெறப்பட்டன. ஆன்லைனிலும் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதை
சரிபார்க்கும் பணி நடக்கிறது. அடுத்தாண்டு, ஜன.,6ல், திருத்தப்பட்ட
வாக்காளர் பெயர்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனிடையே, விண்ணப்பிக்க
தவறியோர் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், அந்தந்த
தாலுகா அலுவலகங்களில், வாக்காளர் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது.
அது சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இருபட்டியல்களும் தொகுக்கப்பட்டு, லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர்
இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளன. ""இப்பணிகளை விரைந்து முடிக்க, தேர்தல்
கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது.
No comments:
Post a Comment