scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 18, 2013

6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு


பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி அளவை பதிவேடை (ஸ்கேல் ரெஜிஸ்டர்) பார்வையிட்டு பணியிடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக சரிபார்த்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.

குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி 6 முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடம் 1:35 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.பாடவாரியான உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்திட ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி 9, 10ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்&மாணவர் விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதில் ஆர்எம்எஸ்ஏ விதிகளின்படி 160 மாணவர்களுக்கு 5 பணியிடங்கள், கூடுதல் 30 மாணவர்களுக்கு 1 பணியிடம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணி பங்கீட்டை விரிவாக ஆய்வு செய்து பாட வேளைகள் உரிய விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். 

ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்த பின்னர் உபரி என கண்டறியப்படும் ஆசிரியர்களை பள்ளி கல்வி இயக்ககம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்ட உடன் பணி நிரவல் செய்து ஆணை வழங்க வேண்டும்.அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரையில் ஆசிரியரின்றி உபரி என்று கண்டறியப்படும் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கத்தக்க வகையில் கருத்துருக்கள், உரிய படிவத்தில் முதன்மை கல்வி அலுவலர்களால் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment