தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணியை நேற்றுசந்தத்து கோரிக்கை மனு அளித்தனர்.மத்திய அரசு இடைநிலை
ஆசிரியர்களின் ஊதியத்திற்கு இணையாக தமிழ்நாடு இடைநிலைஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிடக் கோரியும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து,முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி அளித்துள்ளார். சந்திப்பின்போது,மாநிலத்தலைவர் த.மோகன்தாஸ் பொதுச்செயலாளர் சி.ஜெகநாதன்,மாநில பொருளாளர் பெ.பரமன்சாமி,மாநில உயர்மட்டக்குழு டே.குன்வர் சோசுவா வளவன்,ஆர்.தங்கராஜ் சிவகங்கை மாவட்ட செயலளர் செல்லப்பா,தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொன்ராஜ் ஜான்சன் மற்றும் கல்லூரி மாவட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
மேற்கண்ட கோரிக்கைளை முதல்வர் கனிவுடன் பரிசீலித்திடும் சூழ்நிலை இருக்கும் காரணத்தினால் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக ஒரே குடையின் கீழ் இணைத்து முதல்வரை சந்தித்து கோரிக்கைமனு அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழு முயற்சி மேற்கொள்ளும் என மாநிலத்தலைவர் மோசன்தாஸ் கூட்டணியின் பொதுச்செயலாளர் ஆர்.ஜெகன்னதான் ஆகியோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment