பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை, பஞ்சாயத்து தலைவர்கள் வழங்கலாம்' என, ஏற்கனவே நடைமுறையில் உள்ள உத்தரவை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய் துறை நிறைவேற்றும் திட்ட
பணிகளில் சிலவற்றை, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் அதிகாரம்
குறித்து, 2007 அக்டோபர், 12ல் தமிழக அரசு அதிகாரிகளின் உயர்மட்ட குழு
கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்த கருத்தை அரசு பரிசீலனை
செய்தது. அதை தொடர்ந்து உள்ளாட்சி தலைவர்கள், பிறப்பு - இறப்பு சான்று
வழங்கலாம். பிறப்பு - இறப்பு பதிவுகள் பராமரிக்கும், வி.ஏ.ஓ.,க்கள், அதன்
நகலை மாதந்தோறும் ஊராட்சிக்கு அனுப்ப வேண்டும். சான்று வழங்கியது குறித்து,
பஞ்., தலைவர், வி.ஏ.ஓ., அவ்வப்போது ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என, 2008
ஏப்ரல், 29ல் தமிழக அரசு உத்தரவிட்டது. எனினும், பஞ்சாயத்துகளில் பிறப்பு -
இறப்பு சான்று வழங்கும் திட்டத்தை, தலைவர்கள் நடைமுறைபடுத்தவில்லை.
இந்நிலையில், தமிழக கிராம பஞ்., தலைவர் கூட்டமைப்பு சார்பில், பிறப்பு -
இறப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க கோரி, பிப்ரவரி
மாதம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பிறப்பு, இறப்பு
சான்றிதழ் வழங்கும் உத்தரவை, பஞ்., தலைவர்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த,
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான உத்தரவு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும்
அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் பிறப்பு - இறப்பு
சான்றிதழ்களை, பஞ்சாயத்து தலைவர்களும் வழங்குவர் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment