scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 12, 2013

சர்ச்சைக்குரிய விடைகளை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு

டி.இ.டி., தேர்வில், சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காத தால், ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண்களில், ஏராளமான தேர்வர் கள், தோல்வி அடைந்துள்ளனர். இது குறித்து, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யிடம் முறையிட்டு வருகின்றனர்.நேற்று, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரே நேரத்தில், அனைவரும், அலுவலகத்திற்குள் செல்ல முயற்சித்தனர். பின், தேர்வர்கள் சார்பில், இருவர் மட்டும், டி.ஆர்.பி., தலைவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.அதன்படி, இரு தேர்வர்,
டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து, தேர்வர்கள் கூறியதாவது:
தேர்வை நடத்துவதும், தேர்வு முடிவை வெளியிடுவதும் தான், டி.ஆர்.பி.,யின் வேலை. கேள்வித்தாளை வடிவமைப்பது, விடைகளை தயார் செய்வது, டி.ஆர்.பி., வேலை அல்ல. அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர் குழு தான், இவற்றை செய்கிறது. அப்படியிருந்தும், தேர்வில் பிரச்னை எனக் கூறி, இவ்வளவு பேர் ந்திருக்கிறீர்கள்.எனவே, நீங்கள் குறிப்பிடும் கேள்விகள் மற்றும் விடைகள் குறித்து, மீண்டும் ஆய்வு செய்ய, குறிப்பிட்ட பாடங்களில், அனுபவம் வாய்ந்த, சிறப்பு நிபுணர்களைக் கொண்டு, சிறப்பு குழு அமைக்கப்படும். அக்குழு, என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கும்.
மதிப்பெண்களில் மாற்றம் இருந்தால், இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, டி.ஆர்.பி., தலைவர் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.டி.ஆர்.பி., தலைவரின் கருத்தை அறிய முயன்றபோது, 'சேர்மன், 'மீட்டிங்'கில் இருக்கிறார்; இப்போது பேச முடியாது' என, அலுவலக ஊழியர்கள் தப்பித்தனர்.

No comments:

Post a Comment