ஓய்வூதியதாரர்கள் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை
(லைப் சர்டிபிகேட்) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி
ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எஃப்) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம்
பெறும் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் தாங்கள்
ஓய்வூதியம் பெறும் வங்கியின் கிளை மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த
சான்றிதழில் தங்களின் ஓய்வூதிய ஆணை எண்ணையும், செல்போன் எண்ணையும் அவசியம்
குறிப்பிட வேண்டும். விதவை ஓய்வூதியதாரர்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை
என்ற சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்காதவர்களுக்கு 2014-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஓய்வூதியம்
வழங்குவது நிறுத்தப்படும்.
No comments:
Post a Comment