scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 27, 2013

மாணவனின் மனக்குமுறல் - கவிதை



கவிதை

தன் ஆசிரியரை இழந்த வலியில்
ஒரு மாணவனின் மனக்குமுறல்

வீட்டில் குழந்தை
இருப்பதென்னவோ ஒன்றுதான்…
கோடைக்காக விடுமுறை
ஒரே மாதம்தான்…
ஒரு யுகமாயல்லவோ
கழித்தார்கள்…
அப்போதுதான்
உங்கள் அருமை தெரிந்தது
பெற்றவர்களுக்கு…

நீங்கள்
சொல்வதும் செய்வதும்
வேடிக்கையாகத்தான் தெரிந்தது-நான்
நல்லநிலை எட்டும்வரை…

பழம் பழுப்பது
மரத்துக்காக அல்ல…
நீங்கள் படிப்பதும்
உங்களுக்காக அல்ல…
எங்களுக்காக
நீங்களல்லவோ படித்தீர்கள்…

பக்கத்து வீட்டாரைக்கூட
Face book ல்தான்
பார்த்துக்கொள்கிறார்கள் - ஏன்
பெற்றவர்களையும்தான்…

முகச்சிரிப்பில்லா வாழ்க்கை…

பொருள் சேர்ப்பதிலேயே
பொழுதெல்லாம் போகிறது…
உலகமே இப்படித்தான் – அதில்
நீங்கள் மட்டும் ஏனோ
பிறருக்காகவே பிறந்தீர்கள்…



எத்தனையோ தெய்வங்களை
வேண்டினேன்…
நீங்களல்லவோ அருள் தந்தீர்
என் வாழ்வு முன்னேற - நல்
அருள் தந்தீர்…

கல்விக்குக் கடவுள்
சரஸ்வதி என்கிறார்கள்…
என்னைபொறுத்தவரை-அது
நீங்கள்தான்…

விழி,குருதி,உறுப்பு-தானம்
கேட்டதுண்டு…
செய்ததுண்டு…
ஆயுள்தானம் -
இருந்தால் சொல்லுங்கள்
என் மொத்தத்தையும்
தருகிறேன் உங்களுக்காக…

கொண்டதனை
மக்கச்செய்யும் மண்
விதையை மட்டும்
முளைக்கச் செய்கிறதே…
அந்த மண்ணையும் வேண்டுகிறேன்
என் ஆசான் உங்களை
முளைக்கச் செய்ய…



- ஆக்கம்
ஆசிரியர்குடும்பம்
­­­­­­வெ நேசமணி

No comments:

Post a Comment