தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 94 மையங்களில்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 1.37 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
சென்னையில் 7 மையங்களில் சுமார் 3,000 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வை
மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீரூடை பணியாளர் தேர்வு குழுமம் ஒருங்கிணைத்து
நடத்தியது. இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் (ஆன்சர்
கீ) wwww.tnusrb.tn.gov.in. என்றஇணையத்தளத்திலும்,
www.tnpolice.gov.in என்ற இணையத்தளத்திலும் தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது
. தேர்வர்கள் இந்த இணையத்தளத்துக்குச் சென்று விடைகளைப் பார்த்து
தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் ஒப்புக் கொள்ள முடியாத விடைகள் இருந்தால்
தகுந்த ஆதாரங்களுடன் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அவற்றை இம் மாதம் 18ம்
தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு
குழுமம் அறிவித்துள்ளது. 18-ம் தேதிக்குப் பின்னர் விடைத் தொடர்பாக வரும்
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என அந்த குழுமம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment