இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து
என 2 கோரிக்கைகளை முன் வைத்து 13ஆம் தேதி அனைத்து ஆசிரியர் சங்கங்களை
சேர்ந்த டிடோஜாக் தலைவர்கள் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திப்பதென
முடிவெடுக்கப்பட்டது.
இன்று (09.11.2013 )சென்னையில் நடைபெற்ற டிடோஜாக் கூட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையை சார்ந்த முக்கிய 7ஆசிரியர் இயக்ககங்கள் பங்கேற்றன. கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக வருகிற நவம்பர் 13ஆம் தேதி அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திப்பதென முடிவெடுக்கப்பட்டது.அதற்கடுத்தகட்ட கூட்டம் வருகிற நவம்பர் 20ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமையகத்தில் கூடுவதென முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment