நடந்து முடிந்த TET-2013 தேர்வுக்காக தேர்வர்கள் பலரும் மிக கடினமாக உழைத்துள்ளார்கள். கடந்த
தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்கப்பெற்றதால், இந்த தகுதி தேர்வுக்கு மிக
அதிகபடியான எதிர்பார்ப்புடன் கடினமாக
பலரும் உழைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் நடந்து முடிந்த
தேர்வுக்கான தற்காலிக கீ ஆன்சர்களை டிஆர்பி வெளியிட்டது. இந்த கீ ஆன்சர்கள்
அடிப்படையில் டெட் மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் கணக்கிட்டு தேர்வர்கள் பலரும்
தங்கள் பணி வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளனர்.
தாள் 1 ஐப் பொறுத்தவரை 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற
அனைவருக்கும் வேலைவாய்ப்பக முன்னுரிமை அடிப்படையில் பணி வாய்ப்பு கிடைக்கப்பெறும்
என்பதால் அவர்களுக்கு பெரிதாக எதுவும் பிரச்சினை இல்லை.
ஆனால் தாள் 2 ஐப் பொறுத்தவரை 12th Std, UG, B.Ed என்று வெயிட்டேஜ் கணக்கிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே 12ஆம் வகுப்பில் அதிக படியான மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனால்
சராசரியான மாணவர்கள் கூட 1000 மதிப்பெண்களுக்கு மேல் எளிதாக பெற
முடிகிறது. ஆனால் பத்து வருடங்களுக்கு முந்தைய நிலை வேறு. 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவது அவ்வளவு எளிது அல்ல.
மேலும் 12 ஆம் வகுப்பில் கணக்கு, அறிவியல் என
முதல் குரூப் எடுத்தவர்களின் மதிப்பெண்ணை காட்டிலும் வரலாறு, வொக்கேஷனல் போன்ற குரூப் எடுத்தவர்கள், மற்றும் செய்முறைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் குரூப்பில்
படித்தவர்கள் வெயிட்டேஜ் அதிகம் பெறுவார்கள் என்பது யதார்த்தம்.
இளங்கலை கல்வியை பொறுத்தவரை
நேரடியாக பயின்றவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் அதிகம். அதே சமயம் குடும்ப
சூழ்நிலை காரணமாக தனியார் நிறுவனத்தில் பணி செய்து கொண்டே அஞ்சல் வழி கல்வி மூலம்
கற்பவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. இதனாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக டெட் தேர்வில் 104 மதிப்பெண் எடுப்பவருக்கும் ஒரே வெயிட்டேஜ் 90 மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் ஒரே வெயிட்டேஜ் என்று இருப்பதை மாற்றி
டிஇடி தேர்வில் பெற்ற ஒவ்வொரு மதிபெண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்க பட வேண்டும்.
90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒவ்வொரு
மதிபெண்ணுக்கும் 0.5 MARK என்ற வீதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்
வழங்கி தற்போதைய நிலையில் கடின முயற்சி எடுத்தவருக்கு வாய்ப்பு வழங்கலாமே!.
(ஏனெனில் இந்த 90 முதல் 104 க்குள் தான் பெரும்பாலானோர் மதிப்பெண் பெறுகின்றனர்).
இயன்றால் முதுகலை ஆசிரியத்
தேர்விற்கு வழங்கப்படுவது போன்று வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள
வருடங்களுக்கு ஏற்ப தனியே வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு தனியே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கலாம்.
இவ்வாறு பல்வேறு முரண்பாடுகள் உள்ள நிலையில் தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த டெட் தேர்விலாவது யாருக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த முரண்களை களைந்து அரசாணை வெளியிட வேண்டும் என்பதே தேர்வர் பலரின் விருப்பமாகும்.
No comments:
Post a Comment